திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் உப்புவெளிப் போக்குவரத்துப் பொலிஸாரும் அனுராதபுரச் சந்தியிலுள்ள விபுலானந்தா கல்லுாரி மாணவர்களும் இணைந்து, இன்று புதன்கிழமை (23) காலை, போக்குவரத்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டியதுடன், சாரதிகளைத் தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கி வைத்தனர்.
உப்புவெளிப் பொலிஸ் பொறுப்பதிகாரி டி.ஏ.ஜானக ஜெயரட்ண தலைமையில் நடைஇபற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்வில், உப்புவெளிப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.திஸாநாயக்க மற்றும் கல்லுாரியின் அதிபர் ஆர்.எஸ்.ஜெரோம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார். இதில் பாடசாலை மாணவர்கள், வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி, சாரதிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விபுலானந்தா கல்லுாரி மாணவர்களால் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்வு..
byRajkumar
-
1