சபாநாயகரின் ஆசனத்தில், சாதாரண நபரொருவர் அமர்ந்த விவகாரம் தொடர்பில் செய்திகளை வெளியிட்ட நாடாளுமன்ற ஊடகவியலாளர்கள் இருவர், அதிகாரியினால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு யாருக்கும் அச்சுறுத்த முடியாது. அவை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.