கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற தொழிலாளர் சங்கத்தினரால் கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்களுடைய போராட்டங்கள் விரிவடைந்து கொண்டு செல்கின்றது அந்ந வகையில் கடந்த டிசம்பர் 08 ம் திகதி திருகோணமலையில் உட்துறைமுக வீதியில் உள்ள கிழக்கு மாகாண சபையின் முன் ஆர்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அதன் போது தமது பிரச்சினைகயை 12 அம்ச கோரிக்கையாக கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் செயலகத்தின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ் அவர்களிடம் கையளித்து அது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது.இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரும் கலந்து கொண்டிருந்தார்.
இக்கலந்துரையாடலின் சாரம்சத்தில் நான்கு பிரதானமாக விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.இதில் கிண்ணியா நகரசபையில் அண்மையில் நடைபெற்ற சுகாதார தொழிலாளர் நிரந்தர நியமனத்தின் போது ஏற்கனவே கடமையில் இருந்தவர்களை புறக்கனித்து வெளியில் இருந்து புதிய 04 பேர் நிரந்தர நியமனம் பெற்றிருந்த விடயம் தொடர்பாக ஆராயபட்டது. அப்பிரச்சினைக்கு முதலமைச்சர் செயலகத்தினூடாக வழங்கப்ட்ட பதிலாக கிண்ணியாவில் வழங்கப்ட்ட இந்த நியமனங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசனையுடனும் அனுமதியடனேயே வழங்பட்பட்டது. இதில் விடுபட்ட தொழிலாளர்களின் நியமனம் 180 நாள் பணியாற்றியவர்களுக்கான நிரந்தர நியமன சுற்று நிறுபத்தின் கீழ் வழங்கப்பட்டவுள்ளதையும் தெளிவு படுத்தப்ட்;டது.
அடுத்ததாக திருகோணமலை நகரசபை உப்புவெளி பிரதேச சபை மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை என்பனவற்றில் அண்மையில் வழங்கபட்ட சுகாதார தொழலாளர் நியமனத்தின் போது அவ்வாறு வழங்கபட்ட நியமனதார்கள் சிலர் அலுவலகங்களில் பணிபுரிவதனால் தமது பணி சுமை அதிகரிப்பதாக தொழில் சங்கத்தினர் முன் வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த செயலாளர் இவ்விடயம் தொடர்பாக சம்மந்த பட்ட சபைகளின் தவிசாளர்களுடன் இது விடயமாக ஆராய்வோம் எனவும் தீர்மானிக்கபட்டுள்ளது.
மற்றும் திருகோணமலை நகரசபையின் நூலக உதவியாளர் பதவியில் கடமையாற்றும் ஒருவருக்கு வேலைப் பகுதியின் மேற்பார்வையாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.இதனால் இந்த பணியில் சேவை மூர்ப்புடையோர் பாதிக்கப்படுகின்றார்கள் என தொழிற்சங்கத்தினரின் கோரியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக அதிகாரிகள் குறித்த நபருக்கான நியமனம் குழு ஒன்றின் மூலம் விசாரனை செய்யப்பட்டு அவர்களின் அறிக்கையின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ளது.ஆயினும் இது சேவை மூர்ப்பு உள்ளவர்களின் பதவி உயர்வை பாதிக்குமாயின் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின் முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
அடுத்ததாக முன் வைக்கபட்ட கோரிக்கையானது சிற்றூழியர்களுக்கான பதவி நிலைப்படுத்தல் (கிரேட்) வழங்கப்படாமல் உள்ளது. அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்கள் இதற்கு பதிலளித்த செயலாளர் 2015 ம் ஆண்டு பெப்பரவரி 10ம் திகதிக்கு முன் இவர்களுக்கான பதவி நிலைப்படுத்தல் இடம் பெற்றிருக்கும். அத்துடன் 2015 பெப்ரவரி அன்று இவ்வாரான ஒரு கலந்துரையாடலையும் மீண்டும் நடத்தி விடயங்களை ஆராய்வோம் என இரு தரப்பினரும் தீர்மானித்தனர்.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற தொழிற் சங்கம் முதலமைச்சர் செயலாளரை சந்திப்பு..
byRajkumar
-
0