மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இடம் பெறும் எந்தவொரு நடவடிக்கையினையும் நாம் ஆதரிக்கமாட்டோம் என திருகோணமலை,குச்சவெளி பிரதேசசெயலகத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் ,குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கும்புறுப்பிட்டி சின்னக்கரச்சி பகுதியில் அமையவிருக்கும் தனியார் உப்பளக் கம்பெனிக்கான அனுமதி மீண்டும் அளிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்ட விவாகத்தின் போதே கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் தெரிவித்துள்ளார். அவர் இவ் எதிர்ப்பினை தெரிவித்தார்.
கும்புறுப்பிட்டிசின்னக்கரச்சிபகுதியில் மில் சோல்ட்ரன் என்ற தனியார் கம்பெனிக்கு உப்பளம் அமைக்க அனுமதி வழங்கப் பட்டிருந்த நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்னர் அப்பகுதி மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றிருந்தது.
அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் சம்பந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் வினாவியபோது குறித்த சின்னக்கரச்சி பகுதியில் அமையவிருக்கும் தனியார் உப்பளத்திற்கான வேலைத்திட்டம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆளுiரால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் இணைத் தலைவர் ,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்தபுஞ்சிநிலமே,மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தெரிவித்தனர்.
எனினும் தற்போது மீண்டும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 140 எக்கர் அளவிற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் பகுதியில் ,அப்பகுதி மற்றும் அதனை அண்டியபகுதிகளில் வாழும் வறுமையான மக்கள் மீன்,நண்டு,இறால் பிடித்து ஜீவணோபாயம் நடாத்திவருகிறார்கள். இந்த நிலையில் இவ் உப்பளத்திற்கான அனுமதி அப் பகுதிமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதோடு,
சின்னக்கரச்சி பகுதிக்கு அண்மையில் அமைந்து இருக்கும் பெரியகரச்சியில் தான் ரைகம் (சுயபையஅ) தனியார் உப்பளம் அமைக்கப்பட்டுள்ளது. இவ் உப்பளம் அமைக்கப்பட்டபின் பெரியகரச்சி பகுதியில் ஜீவணோபாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள். ஏழ்மையான எமது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் இவ்வுப்பளத்தை மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இத்தகைய மக்களின் எதிர்ப்பின் மத்தியில் ஒரேபகுதியில் அடுத்தடுத்து இரு உப்பளங்கள் தேவைதான? என்பதுபற்றி சிந்திக்கவேண்டும். மக்கள் எதிர்க்கும் எத்தகைய ஒரு நடவடிக்கைக்கும் நாம் ஆதரவு தெரிவிக்கமாட்டோம் தொடர்ந்தும் ஒரேபகுதியினைச் சேர்ந்தமக்கள் பாதிக்கப்படுவதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம். மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் நாம் எமது மக்களின் பக்கமே நிற்போம்.என தெரிவித்த ஜெ.ஜெனார்த்தனன் உடனடியாக அப்பகுதியில் தொழில் செய்யும் மக்களுடன் சந்திப்பினை ஏற்படுத்தி நிலைமையினை விளங்கிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும் என குச்சவெளி பிரதேசசெயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பிரதேச செயலாளார் மக்கள் சந்திப்பினை ஒழுங்கு செய்வதாக தெரிவித்திருந்தார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த குச்சவெளிபிரதேச சபை உறுப்பினர் புஷ்பகாந்தனும் இவ்வுப்பளத்திற்கு தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். தான் அப்பகுதியில் வசிப்பதாகவும் மக்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இடம் பெறும் எந்தவொரு நடவடிக்கையினையும் நாம் ஆதரிக்கமாட்டோம்-ஜெ.ஜெனார்த்தனன்
byRajkumar
-
0