பெண்கள் வன்முறைக்கெதிரானசர்வதேச 16 நாள் செயற்பாட்டுநிகழ்வுகள் அனைத்துபிரதேசங்களிலும் நடைபெற்றுவருவதுகுறிப்பிடத்தக்கது. இவ்வகையில் 09.12.14 (செவ்வாய்) அன்று திருகோணமலை குச்சவெளி பிரதேசபெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் சலப்பையாறு சமூகபராமரிப்புமையக் கட்டிடத்தில் நடைபெற்றது சர்வதேசபெண்கள் வன்முறைக்கெதிரான 16 நாள் விழிப்பூட்டல் செயலமர்வு
இந்நிகழ்வானது குச்சவெளி பிரதேசத்தின் சலப்பையாறு உள்ளிட்ட குறிப்பிட்ட சில கிராமங்களில் அதிகளவில் இடம்பெறும் பெண்கள் மீதான வன்முறைகளைதடுக்கும் வகையிலான தெளிவுபடுத்தல் மற்றும் தொடர் வேலைத்திட்டங்களுக்கான செயலமர்வாக அது அமைந்தது. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இச்செயலமர்வானது திருக்கோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி'அகம்'அமைப்பின் மதியுரைஞர் திரு.பொ.சற்சிவானந்தம் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.
குச்சவெளிபிரதேசபெண்கள் வலையமைப்பின் தலைவி செல்வி.ம.கஜநிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக பட்டினமும் சூழலும் பிரதேசபெண்கள் வலையமைப்பின் தலைவி.நா.ஜெயலெட்சுமிப்பிள்ளை மற்றும் திருக்கோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி'அகம்'அமைப்பின் பிரதி இணைப்பாளர் திரு.செ.கலாரதன் ஆகியோருடன் கும்பிறுபிட்டிகிழக்கு,சபப்பையாறு கிராமசேவகர் பிரிவுகளின் கிராமசேவைஅலுவலர் திரு.ளு.நித்தியலிங்கம் அவர்களுடன் நாவற்சோலை,சலப்பையாறுகிராமசேவகர் பிரிவுபொருளாதாரஅபிவிருத்திஉத்தியோகத்தர்செல்வி.யு.அம்ஷpஜா மற்றும் நாவற்சோலைகிராமஅபிவிருத்திசங்கத்தின் தலைவர் திரு.சாந்தன் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர்.
சர்வதேச பெண்கள் வன்முறைக் கெதிரான 16 நாள் விழிப்பூட்டல் செயலமர்வு நிகழ்வு
byRajkumar
-
0